பெங்களூரு, : ‘அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா அன்று, மாநிலம் முழுதும் மின்சாரத்தை துண்டிக்க, காங்கிரஸ் அரசு சதி செய்கிறது’ என பா.ஜ., குற்றம்சாட்டியது.
இதுகுறித்து, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் நேற்று பா.ஜ., கூறியிருப்பதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா, 22ல் சிறப்பாக நடக்கவுள்ளது. நாடு முழுதும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இவர்களின் மகிழ்ச்சியை கெடுக்க, சதி நடக்கிறது.
கோத்ரா போன்று வன்முறை நடக்கும் என, மிரட்டல் விடுத்து, ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்லவிடாமல் தடுக்க, முயற்சி நடக்கிறது. பொய் சொல்லி ராம பக்தர்களை அச்சுறுத்துகின்றனர். 22ல், மக்களை கொண்டாட விடாமல் செய்யும் நோக்கில், மாநிலம் முழுதும் 144 தடை உத்தரவை அமல்படுத்தி, வீடுகளில் மின்சாரம், கேபிள் டி.வி., இணைப்பை துண்டிக்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது.
வறட்சியால் அவதிப்படும் விவசாயிகளுக்கு, மேலும் சூடு போடுகிறது. மின்வெட்டால் இவர்கள் கஷ்டப்படும் நிலையிலும், மின்சாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் காணாமல் போய்விட்டார். விவசாயிகளை கண்டால், உங்கள் அரசுக்கு ஏனிந்த துவேஷம் என்பதற்கு, நீங்களே பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement