சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது ‘ஜி’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன்.
சிறப்பு அம்சங்கள்
- 6.6 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
- 4ஜிபி/8ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பிரதான கேமரா
- 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ கேமராவும் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- 6,000mAh பேட்டரி
- 33 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜர்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் வந்துள்ளது
- வரும் 7-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது
- இந்த போனின் தொடக்க விலை ரூ.8,999
Turbocharge your experience with #MotoG24Power! Unleash the power of its 6000mAh battery, dynamic design, and Android 14 for endless fun.
Sale starts 7th Feb at ₹8,249 @Flipkart, https://t.co/azcEfy1Wlo & leading stores. #DikheMastChaleZabardast pic.twitter.com/A3CkAMMBZL— Motorola India (@motorolaindia) January 30, 2024