மன்னிப்பு கேட்ட விராட் கோலி… 'அதிகாலை 3 மணிவரை குடித்தோம்' – டீன் எல்கர் பகிர்ந்த அதிர்ச்சி கதை!

Virat Kohli Dean Elgar: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியோடு தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார். 

‘என்னை பார்த்து துப்பினார்’

அந்த வகையில், தற்போது தனது கிரிக்கெட் வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசி உள்ளார். அப்போது,  2015ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றையும் டீன் எல்கர் பகிர்ந்துகொண்டார். 

2015ஆம் ஆண்டில் மொஹாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, ஆடுகளத்தில் தன்னை நோக்கி விராட் கோலி எச்சில் துப்பியதாக அவர் கூறினார். போட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர்,”அந்த ஆடுகளங்கள் மிக வேடிக்கையாக இருந்தன. அங்கு விளையாடுவதும் அப்படிதான் இருந்தது. நான் பேட்டிங்கிற்கு வந்தேன், அப்போது அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக கடுமையாக போராடிக்கொண்டிருந்தேன். மேலும் அப்போது கோலி என்னை பார்த்து எச்சில் துப்பினார். 

‘பேட்டை வைத்து அடித்தே விடுவேன்’

“அதை பார்க்க எனக்கு கோபம் வந்தது. நானே உடனே கோலியிடம் சென்று, ‘இனி நீ… இப்படி செய்தால் இந்த பேட்டை வைத்து உன்னை அடித்தே விடுவேன்’ என்றேன்” என இரட்டை அர்த்தம் மற்றும் வசை சொல் கலந்து பதிலடி கொடுத்ததாக எல்கர் நினைவுக்கூர்ந்தார். 

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by Smash Sports (@smashsportsinc)

கோலிக்கு நீங்கள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்ததா என்று பின்னணியில் யாரோ கேட்டதற்கு, எல்கர் இவ்வாறு பதிலளித்தார், “ஆம் தெரியும்” என்றார். மேலும், ஆர்சிபியில் டி வில்லியர்ஸ் அப்போது அவருடன் விளையாடிக் கொண்டிருந்தார் எனவும் இதுகுறித்து டி வில்லியர்ஸ் கோலியிடம் பேசியதாகவும் டீன் எல்கர் கூறினார். இருப்பினும், டி வில்லியர்ஸ் இதுகுறித்து எப்போது கோலியிடம் பேசினார் என்பதை எல்கர் சரியாக குறிப்பிடவில்லை. 

மன்னிப்பு கேட்ட விராட் கோலி

டி வில்லியர்ஸ், கோலியிடம் இவ்வாறு சொன்னதாக டீன் எல்கர் அந்நிகழ்ச்சியில் கூறினார், “கோலியின் செயலை பார்த்த டி வில்லியர்ஸ் அவரிடம் சென்று பேசினார். ‘என்னுடைய அணி வீரர் நோக்கி ஏன் எச்சில் துப்புகிறாய், இது தவறு’ என பேசியுள்ளார். சுமார் இரண்டு வருடங்களுக்கு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு விளையாட வந்திருந்தபோது, விராட் கோலி என்னிடம் வந்து பேசினார்.

அப்போது, ‘இந்த தொடர் முடிந்தது நாம் இருவரும் மது அருந்த வெளியே செல்லலாமா?’ என கேட்டார். தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டம் என என்னிடம் கூறினார். அன்று நாங்கள் இருவரும் அதிகாலை 3 மணிவரை மது அருந்திக்கொண்டிருந்தோம். அப்போது மது அருந்தி வந்தார். தற்போது அவர் கொஞ்சம் மாறிவிட்டார்” என டீன் எல்கர் தெரிவித்தார்.

மேலும், தனது கடைசி டெஸ்ட் போட்டியை கோலி, அஸ்வின் போன்ற வீரர்களுக்கு எதிராக விளையாடியது அற்புதமான அனுபவமாக இருந்ததாகவும் டீன் எல்கர் கூறினார். டீன் எல்கரின் கடைசி போட்டியின்போது, விராட் கோலி உள்பட அனைத்து இந்திய வீரர்களும் அவருக்கு மனமார்ந்த பிரியாவிடை அளித்தனர். விராட் கோலி தனது ஜெர்ஸி ஒன்றையும், டீன் எல்கருக்கு பரிசாக அளித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.