தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் குட்கா பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கர்நாடகாவில் குட்கா விற்பனைக்கு எந்த தடையும் இல்லை. மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முச்சந்திப்பில் அமைந்துள்ள நீலகிரி வழியாகவே… கர்நாடகாவிலிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சட்டவிரோதமாக குட்கா பொருள்களைக் கடத்திச் செல்கின்றனர்.

நீலகிரியில் குட்கா புழக்கத்தை முழுமையாக ஒழிக்கும் முயற்சியாக காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டும், குறைந்தபாடில்லை. இந்த நிலையில், கோத்தகிரி பகுதியில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வணிகர் ஒருவர், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை மொத்தமாக விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அந்த மொத்த விற்பனை கடையில் சோதனை மேற்கொண்டதில், அறை முழுக்க மலை மலையாய் குட்கா பண்டல்கள் குவிந்து கிடப்பதைக் கண்டு, காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் ஜெயசிம்மன் என்பவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்துள்ளனர். இதேபோல் கோத்தகிரி அருகில் உள்ள அரவேனு பகுதியில் சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்களை வைத்திருந்த ராஜசேகர் என்பவரையும் கைதுசெய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், “கோத்தகிரி ரைஃபில் ரேஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஜெயசிம்மன் என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைச் சட்டவிரோதமாக மொத்த விற்பனை செய்து வந்தததைக் கண்டறிந்து, சோதனை மேற்கொண்டோம். அவரது கடையில் சுமார் 13,000 குட்கா பண்டல்களைக் கைப்பற்றினோம். இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். இதேபோல் குட்கா விற்பனையில் ஈடுபட்ட அரவேனு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரையும் கைதுசெய்துள்ளோம். சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY