சென்னை: தனுஷ் தற்போது 51வது படத்தில் நடித்து வருகிறார். D51 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது. தனுஷ், நாகர்ஜுன் நடிக்கும் காட்சிகள் தற்போது திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷின் D51 படப்பிடிப்பால் திருப்பதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் D51 படப்பிடிப்பில் சர்ச்சை: தனுஷ்