வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லாகூர்: பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை கண்டித்து பலுசிஸ்தானில் நடந்த போராட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 4 பேர் பலியாயினர்.
பாகிஸ்தானின் பிரதான கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராக மாஜி கிரிக்கெட் அணி கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் உள்ளார். இவர் தனது பதவி காலத்தில் அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
இதை கண்டித்து பாகிஸ்தான் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் பாலுசிஸ்தான் மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தான் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சியைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர்.தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு வரும் பிப்ரவரியில் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் பரபரப்பு காணப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement