வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய பாகிஸ்தானை சேர்ந்த 19 மாலுமிகளை இந்திய கடற்படையினர் இன்று (ஜன-30) மீட்டனர். கடந்த 36 மணி நேரத்தில் இந்திய படையினரின் ஈராக்கை சேர்ந்தவர்கள் 17 பேர் மீட்கப்பட்ட சம்பவம் சாதனையாக போற்றப்படும் வேளையில் இன்றும் இந்திய படையினருக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
வளைகுடா மற்றும் கிழக்கு சோமாலியா பகுதிகளில் கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சோமாலியா கிழக்கு கடற்கரை பகுதியில், ஈரான் கொடியுடன், 17 பேருடன் மீன்பிடிக் கப்பல் சென்றது. அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர், கப்பலை கடத்தியதுடன், அதிலிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
அவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, நம் கடற் படையின் ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல், சம்பவ இடத்துக்கு விரைந்து, கடற்கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் அதிலிருந்தவர்களை காப்பாற்றினர்.
இன்று சோமாலிய கடற்பகுதி அருகே பாகிஸ்தானை சேர்ந்த அல்நயீமீ என்ற மீன்பிடி கப்பலை வழிமறித்து கொள்ளையடிக்கவும் கப்பலில் இருந்தவர்களை கடத்தவும் முயன்றனர். இத்தகவல் இந்திய கடற்பைடையினருக்கு கிடைத்தது. இதனையடுத்து ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலில் விரைந்து கடற்கொள்ளையர்கள் 11 பேரை துப்பாக்கி முனையில் பிடித்தனர். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த மாலுமி, மீனவர்கள், மற்றும் ஊழியர்கள் 19 பேரை இந்திய படையினர் மீட்டனர். இத்தகவலை நமது படையினர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement