நியூயார்க்: ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி, 25, என்ற மாணவர், இரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக சென்றார். ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் தங்கியிருந்த அவர், சமீபத்தில், எம்.பி.ஏ., படிப்பை படித்து முடித்தார்.
இதற்கிடையே, லித்தோனியா நகரில் உள்ள கடை ஒன்றில், விவேக் சைனி பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். இங்கு ஏற்கனவே தங்கி பணிபுரியும் ஜூலியன் பால்க்னர் என்பவரிடம், அவர் கடந்த சில நாட்களாக அக்கறையுடன் பழகி வந்தார்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி விவேக் சைனி வீட்டிற்குச் செல்லும் போது பின்தொடர்ந்து வந்த ஜூலியன் பால்க்னர், சுத்தியலால் அவரை தாக்கினார். தலையில், 50 முறை தாக்கப்பட்டதில், சம்பவ இடத்திலேயே விவேக் சைனி உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement