Maldivian President should apologize to Modi: Opposition Leader insists | மோடியிடம் மாலத்தீவு அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும்: எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாலே: இந்திய பிரதமர் மோடியிடம் மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் சீன ஆதரவாளர் ஆவர். .நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகமது முய்சு மீது முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன..

இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன் பார்லி., சிறப்பு கூட்டத்தில் ஆளும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.,க்களுக்கும் இடையே நடந்த அடிதடி வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதன் எதிரொலியாக அதிபர் முகமது முய்சுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாலத்தீவின் பிரதான எதிர்கட்சியான எம்.டி.பி., எனப்படும் மாலத்தீவு ஜூம்ஹூரி கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, பகையை வளர்த்து , இந்திய பிரதமர் மோடியை அவமதித்து விட்டார். இந்தியாவிடமும், இந்திய பிரதமர் மோடியிடம் அதிபர் முகமது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.