சென்னை: தமிழ்சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா எனக்கு பாட்டு பாடமட்டுமில்ல நடிக்கவும் வரும் என்பதை பல படங்களில் நடித்து நிரூபித்துள்ளார். தற்போது இவர், பிசாசு 2 , நோ என்ட்ரி, கா, மாளிகை என வரிசையாக படங்களை கையில் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார். அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
