இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஐக்கிய இராச்சிய கடற்படைக் கப்பல் ‘HMS Spey’ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் (SLN) கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்றனர் என்று கடற்படை ஊடகம் தெரிவிக்கிறது.
90.5 மீ நீளமுள்ள கடல் ரோந்துக் (OPV) கப்பலான ‘HMS Spey’, 56 கடற்படைப் பணியாளர்களைக் கொண்டது.
இவ்விஜயத்தின் போது கப்பலின் பணியாளர் குழுவினர் பல உள்நாட்டு சுற்றுலா தலங்களுக்கு செல்லவுள்ளனர்.
HMS Spey புதன்கிழமை (ஜனவரி 31) நாட்டை விட்டு வெளியேற முன்னர், இலங்கை கடற்படை கப்பலுடன் Passage Exercise (PASSEX) பயிட்சி நடவடிக்கை ஒன்றில் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.