சென்னை: கலைத் திருவிழா மூலம் 50 மாணவர்கள் வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் 40 லட்சம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறினார். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற வெற்றியாளர் களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு […]