சிம்பு, வரலட்சுமி திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி
சிம்புவும், வரலட்சுமியும் தீவிரமாக காதலித்து வருவதாக நேற்று திடீரென புதிய வதந்தி கிளம்பியது. இருவரும் கலை குடும்பத்து வாரிசு என்பதாலும், சரத்குமாரும், டி.ராஜேந்தரும் நண்பர்கள் என்பதாலும், வரலட்சுமியின் முதல் படமே சிம்புவுடன் என்பதாலும் அனைவரும் இதனை உண்மை என்றே நம்பினார்கள். அதுவும் திருமணம் பற்றி சிம்பு தனது பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதனை இருவருமே மறுத்து விட்டார்கள். 'நானும் வரலட்சுமியும் நல்ல நண்பர்கள் மட்டுமே. நான் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை” என சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 'சிம்புவுக்கும், எனக்கும் திருமணம் இல்லை. அவர் என் நண்பர்' என வரலட்சுமி தரப்பிலும் கூறியுள்ளனர். இதனால் திருமண வதந்தி ஒரு முடிவுக்கு வந்தது.