சென்னை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை நகரில் ஒரு தொகுதியைக் கேட்க உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில், மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினத்தையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் தியாகிகளின் உருவப்படத்திற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம்,, ”பாஜகவினர் ராமர் கோவிலைக் கட்டிவிட்டதால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் கோவில் கட்டியவர்கள் யாரும் வெற்றிபெற்றதாக வரலாறு கிடையாது. நீங்கள் கோவில் வேலை முடியாமலேயே கும்பாபிஷேகம் செய்துள்ளீர்கள் என்பதால் 4 சங்கராச்சாரியார்கள் உங்களை […]