தாமதமின்றி நிகழ்நிலைப் பாதுகாப்புத் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்படும் என்றும் இச்சட்டத்தின் ஊடாக சமூக ஊடகங்களுக்கு எவ்வித வரையறையும் ஏற்படுத்தப்படாது என வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய குறுகிய நோக்கங்களுக்கு சமூக ஊடகங்களை உந்து சக்தியாக பயன்படுத்துதல் மற்றும் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது தடுப்பதே இதன் நோக்கம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர்களுடனான கலந்துரையாடலின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எந்தவொரு சமூக ஊடகமும் ஏனையவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தாது என்றும், மத உணர்வுகள், சமயங்களுக்கிடையில் முரண்பாடு, சிறுவர் துஷ்பிரயோகம், தனிநபர்களை அச்சுறுத்துதல், வன்முறைகளைத் தூண்டுதல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றை ஏற்படுத்தும் நபர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதற்காக உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் பின்பற்றியதாக மற்றும் அங்கீகாரத்திற்கு இணங்க இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
அதற்கிணங்க சர்வதேச ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு ஏற்ப அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்கு ,இந்நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பான யோசனையை முன்வைத்துள்ள விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும், சட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒழுங்குவிதிகளை பிரயோகிக்கப்படும் இதன்போது அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனூடாக நிராயுதமான சிறந்த மனிதர்களை அச்சம் மற்றும் சந்தேகத்திற்கு அப்பால் வாழ்வதற்கு மற்றும் சுதந்திரமாக வேலைகளை மேற்கொள்வதற்கு அவசியமான சந்தர்ப்பத்தை வழங்க முடியும் என்றும், தர்மத்துடனான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு இச்சட்டத்தினால் எவ்வித இடையூறும் ஏற்படாது என மேலும் அமைச்சர் விபரித்தார்.