தெலுங்கில் 'லவ்குரு' ஆன 'ரோமியா'
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்கும் படம் 'ரோமியோ'. விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். பரூக் ஜே.பாஷா ஒளிப்பதிவு செய்கிறார், பரத் தனசேகர் இசை அமைக்கிறார்.
விஜய் ஆண்டனி முதன் முறையாக நடிக்கும் முழுநீள காதல் ரொமாண்டிக் படம் இது. இந்த படம் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு 'லவ் குரு' என்று டைட்டில் வைத்துள்ளனர். படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. விஜய் ஆண்டனியே படத்தின் எடிட்டராகவும் பணியாற்றுகிறார்.