2023 டிசம்பர் மாதம் மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து ரசாயன புகை குண்டுகளை வீசிய வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் இவர்களை துன்புறுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜரான இவர்கள், போலீசார் தங்களை கொடுமைப்படுத்தினர், வெற்றுத் தாளில் கையெழுத்திட நிர்பந்தித்தனர் என்று பரபரப்பு புகார் அளித்துள்ளனர். மேலும், “சமூக வலைதள கணக்குகள், இமெயில், செல்போன்களின் பாஸ்வேர்டு ஆகியவற்றை […]
