இந்தியாவிற்கு பிரத்தியேகமாக வரவுள்ள எதிர்கால மாடல்கள் மற்றும் புதுமையான நுட்பங்கள் என அனைத்தும் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo) அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக இந்த கண்காட்சியில் எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான முக்கிய மாடல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. பிப்ரவரி 1 முதல் 3 ஆம் தேதி வரை புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள கண்காட்சியில் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். […]