டில்லி ராகுல் காந்தி சென்ற காரில் திடீரென பிரேக் போட்டதால் கண்ணாடி உடைந்ததாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாகாலாந்து, ராகுல் காந்தியின் யாத்திரை அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாகத் தொடர்ந்து வருகிறது. நேற்று மேற்கு வங்கத்தின் மால்டா பகுதி அருகே சென்றபோது ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்தது. ராகுல் காந்தியின் கார் மீது சிலர் கல்லெறிந்ததாக […]