'ஸ்டார்' – எழுத்திலிருந்து காட்சியாக மாற 3 வருட காத்திருப்பு
யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கியவர் இளன். தற்போது கவின் நடிக்க 'ஸ்டார்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்திருந்தார் இளன். “நேற்று திருப்திகரமான ஒரு வேலை நாள். 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய காட்சி ஒன்றை வெற்றிகரமான படமாக்கினேன். அதை மிகச் சிறப்பான ஆதரவுடன் நிறைவேற்றி என்னுடைய குழுவினர் கவின், ஆகியோருக்கு நன்றி. குறிப்பு – இடைவேளைக்குப் பிறகான முதல் காட்சி இது,” என்று படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இளன் இயக்கி வரும் படம் 'ஸ்டார்'. இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.