பெங்களூரு : விமானத்தில் சோதனையிட எதிர்ப்புத் தெரிவித்த பயணி கைது செய்யப்பட்டார்.
கேரளாவைச் சேர்ந்தவர் சஞ்சு குமரன், 48. பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது நிறைமாத சகோதரிக்கு 28ம் தேதி பிறந்த குழந்தை இறந்தது.
அவரை பார்ப்பதற்காக அன்றைய தினம் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கேரளா செல்ல ‘ஏர் இந்தியா’ விமானத்தில் ஏறினார்.
விமானத்தில் பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர். சஞ்சு குமரனிடம் வந்தபோது, பையை சோதனையிட எதிர்ப்பு தெரிவித்த அவர், ‘எனது பையில் வெடிகுண்டோ, கத்தியோ இருப்பதாக நினைக்கிறீர்களா?’ என கேட்டார்.
அதிர்ச்சி அடைந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், அவரை, பெங்களூரு விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement