Bangalore Municipal Corporation plans to build Rajiv statue | ராஜிவ் சிலை அமைக்க பெங்களூரு மாநகராட்சி திட்டம்

பெங்களூரு : பெங்களூரின் மல்லேஸ்வரத்தில், 1.11 கோடி ரூபாய் செலவில், முன்னாள் பிரதமர் ராஜிவ் உருவச்சிலை அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

15வது நிதி ஆயோக் திட்டத்தின் நிதியில் மேம்படுத்தப்படும் 25 சந்திப்புகளில் சுபாஷ் நகரும் ஒன்றாகும். இதற்கு முன்பு இங்கு, முன்னாள் பிரதமர் ராஜிவ் சிலை கான்கிரீட்டில் நிறுவப்பட்டிருந்தது. பணிகளுக்காக சிலை அகற்றப்பட்டது.

தற்போது கல்யாண் இன்ப்ரா பிராஜெக்ட்ஸ் நிறுவனம், டெண்டர் பெற்று பணிகளை நடத்தி வருகிறது.

ராஜிவ் சிலையை மீண்டும் நிறுவ, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பெங்களூரின், இதய பகுதியில் உள்ள மல்லேஸ்வரத்தின், மந்த்ரி ஸ்கொயர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், 1.11 கோடி ரூபாய் செலவில் ராஜிவ் சிலை அமைக்கப்படும். கான்கிரீட் சிலைக்கு பதிலாக, வெண்கல சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவை மாநகராட்சியே ஏற்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.