Budget 2024: நாளை பட்ஜெட் தாக்கல், இன்றே அரசின் பரிசு.. குறைகிறது மொபைல் போன்கள் விலை

இடைக்கால பட்ஜெட் 2024-25: பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நாளை (பிப்ரவரி 1ஆம் தேதி) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படயுள்ள நிலையில், தற்போது சற்று முன் இந்திய அரசு மொபைல் போன்கள் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 10 ஆக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மலிவான விலையில் தொலைபேசிகளைப் பெற முடியும்.

நிதியமைச்சக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது:
மத்திய அரசின் நிதி அமைச்சகமும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுங்கச் சட்டம் 1962 பிரிவு 25ன் கீழ், பொது நலனைக் கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல மொபைல் உதிரிபாகங்களின் இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல வகையான மொபைல் உதிரிபாகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் எழுதப்பட்டுள்ளது.

இந்த பாகங்கள் அல்லது உள்ளீடுகள் மீதான வரி குறைக்கப்பட்டது:
இந்த முடிவின் கீழ், மொபைல் போன்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல பாகங்கள் அல்லது உள்ளீடுகள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவின் கீழ், இறக்குமதி வரி குறைக்கப்பட்ட அந்த 12 பொருட்களின் பெயர்களை அறியவும்.

Government of India slashes import duty on key components used in the production of mobile phones. The import duty has been reduced from 15 per cent to 10 per cent. pic.twitter.com/22CIz9Qoch

— ANI (@ANI) January 31, 2024

பேட்டரி கவர்
ஃப்ரண்ட் கவர்
மிடில் கவர்
மென் லென்ஸ்
பேக் கவர்
GSM ஆண்டெனா / எந்த தொழில்நுட்பத்தின் ஆண்டெனா
PU கேஸ் அல்லது சீல் கேஸ்கெட்
PP, PE, EPS மற்றும் EC போன்ற பாலிமர்களால் செய்யப்பட்ட சீல் கேஸ்கட்கள் அல்லது பாகங்கள்
சிம் சாக்கெட்
ஸ்க்ரூ
பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மற்ற இயந்திர பொருட்கள்
உலோகத்தால் செய்யப்பட்ட மற்ற இயந்திர பொருட்கள்

இது தவிர, வேறு சில பகுதிகளுக்கான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது:
கண்டக்டிவ் கிளோத்
எல்சிடி கண்டக்டிவ் புகைப்படம்
எல்சிடி ஃபோம்
பீடி ஃபோம்
ஹீட் டிசிபேஷன் ஸ்டிக்கர் பேட்டரி கவர்
ஸ்டிக்கர்-பேட்டரி ஸ்லாட்

எனவே மொபைல் உதிரிபாகங்களின் மலிவான இறக்குமதி காரணமாக, நாட்டில் மலிவான மொபைல் போன்கள் தயாரிக்கப்படும்.

இந்நிலையில் ஏற்கனவே பட்ஜெட்டிற்கு முன்பு என்னென்ன பொருட்கள் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு ஒருநாளுக்கு முன் இறக்குமதி வரியை அரசு குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.