பெங்களூரு, : நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அலட்சியம் காண்பித்த பெங்களூரு மாநகராட்சி மீது, கர்நாடக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
பெங்களூரில் பெரும்பாலான நடைபாதைகளை, தனியார் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். நடைபாதைகளில் கடைகள் உள்ளன.
பொருட்களை பரப்பி வைத்துள்ளதால், பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதில், மாநகராட்சி ஆர்வம் காண்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விஷயத்தை தீவிரமாக கருதிய கர்நாடக உயர்நீதிமன்றம், தானாக முன் வந்து, பொதுநலன் மனுவாக பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. நேற்று மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சியின் அலட்சியத்துக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
அனைத்து நடைபாதைகளிலும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பிப்ரவரி 1ல், மாநகராட்சி தலைமை கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என, உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement