Train engine pilot arrested for showing handcuffs to passenger | பயணியரிடம் கைவரிசை காட்டிய ரயில் இன்ஜின் பைலட் கைது

ஹாசன் : கடனை அடைப்பதற்காக ரயில் பயணியரிடம் திருடிய, ரயில் இன்ஜின் உதவி லோகோ பைலட் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு – கார்வார் இடையில் இயக்கப்படும் ரயிலில் பயணம் செய்த பயணியரின், சூட்கேஸ்களை திறந்து, ஒரு கும்பல் திருட்டில் ஈடுபட்டது. இதுகுறித்து சக்லேஷ்பூர் ரயில்வே போலீஸ் நிலையத்தில், ஐந்து வழக்குகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி இரவு, பெங்களூரு – கார்வார் ரயில் சென்றதும், சக்லேஷ்பூர் ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ரயில் இன்ஜின் உதவி லோகோ பைலட் ஸ்வராஜ், 33, என்பவர், தண்டவாளத்தில் டிராலி பையுடன் வந்தார். அந்த நேரத்தில் அவர் பணியில் இருக்கவில்லை.

டிராலியுடன் வந்ததால் சந்தேகம் அடைந்து, ரயில்வே போலீசார் டிராலியை திறந்து பார்த்தபோது, அதற்குள் மடிக்கணினி, தங்க நகைகள், மொபைல் போன்கள் இருந்தன.

இதுகுறித்து கேட்ட போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது பயணியரிடம் திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 3.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மடிக்கணினி, தங்க நகைகள், மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்வராஜ், 2021ல் ரயில்வே துறையில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு 13 லட்சம் ரூபாய் கடன் உள்ளது.

அந்த கடனை அடைப்பதற்காக, ரயில் பயணியரிடம் திருட்டில் ஈடுபட்டு உள்ளார். சக்லேஷ்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, சுப்பிரமணியா ரயில் நிலையம் வரையிலான ரயில் தண்டவாளம், வனப்பகுதி சாலையில் செல்கிறது.

இந்த பகுதியில் ரயில் மெதுவாக செல்லும்போது, சிக்னலுக்காக நிற்கும்போது, ரயிலில் ஏறி, கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.