பாகிஸ்தான்: இம்ரான் கான் கட்சி பேரணியில் குண்டுவெடிப்பு; 4 பேர் பலி

கராச்சி, பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் நேற்று (செவ்வாய் கிழமை) பேரணி ஒன்றை நடத்தினர். அக்கட்சியின் கொடியை ஏந்தியபடி, பைக்குகளில் அவர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 3 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனை அக்கட்சிக்கான மாகாண … Read more

இராஜாங்க அமைச்சர் தென்னகோன் ஐக்கிய இராச்சிய கடற்படை கப்பலான ‘HMS க்கு விஜயம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித்த பண்டார தென்னகோன், (ஜன. 29) மாலை ஐக்கிய இராச்சிய கடற்படை கப்பலான ‘HMS க்கு விஜயம் செய்தார். இக்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 28) இலங்கை வந்தடைந்தது. கப்பலுக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் போல் கெட்டி வரவேற்றார். இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் தென்னகோன், … Read more

US Visa: ஆன்லைனில் அமெரிக்க விசா ரெனியூவல்! அருமையான வாய்ப்பை தவறவிடவேண்டாம்!

H-1B Visa Online Updation: ஆன்லைனிலும் அமெரிக்க விசாவை புதுப்பிக்கலாம் தெரியுமா? US H-1B விசா புதுப்பித்தல் இயக்கம் ஆன்லைனில் தொடங்கியது… எப்படி விண்ணப்பிப்பது? விதிமுறைகள் என்ன?

மொபைலில் விளம்பரம் பார்த்தால் பணம் கொட்டுமா? My V3 Ads மோசடி வரலாறு..!

எப்படி எல்லாம் சைடு வருமானம் சம்பாதிக்கலாம் என பலரும் தேடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், மொபைலில் விளம்பரம் பார்த்தாலே பணம் கொட்டும் என கோவையில் கடையை போட்டது ‘My V3 Ads’ என்ற மொபைல் ஆப் நிறுவனம். ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், தற்போது My V3 Ads நிறுவனம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காவல்துறையும் இவ்விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. My V3 Ads `My V3 Ads’ நிறுவனத்துக்கு ஆதரவாக … Read more

மநீம.வுக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை: தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்களவைத் தேர்தல் பணிக்கான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு வெளிநாடு சென்றதால் முன்னதாக சென்னையில் கட்சித் தலைமையகத்தில் துணைத் தலைவர்கள்மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோருடன் நேற்றுஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மக்களவைத்தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவையும் அவர் அமைத்தார். இது தொடர்பாக கமல்ஹாசன் நேற்று விடுத்த அறிக்கை: மக்களவைத் தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொண்டு பெருவெற்றியை ஈட்டுவதற்காக மக்கள்நீதி மய்யத்தின் மூத்த நிர்வாகிகளை … Read more

உத்தராகண்ட் மாநிலத்தில் மதரஸா பாடதிட்டத்தில் ராமாயண கதைகள்: வக்பு வாரிய தலைவர் தகவல்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மதரஸாக்களின் பாடதிட்டத்தில் ராமாயண கதைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் மதரஸா எனப்படும் முஸ்லிம்களுக்கான கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், வழக்கமான பாடதிட்டங்களுடன் இஸ்லாம் மதம் பற்றி கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 117 மதரஸாக்களின் பாடதிட்டத்தில் ராமாயண கதைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்கட்டமாக டேராடூன், ஹரித்வார், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 4 நகரங்களில் … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..! எதிர்கட்சிகள் வியூகம் என்ன?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், எதிர்கட்சிகளைச் சேர்ந்த எம்பிகளின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.   

மோடி வெற்றி பெற்றால் அதிபர் ஆட்சி முறைக்கு இந்தியா மாறும் – ஆ.ராசா எச்சரிக்கை

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக மோடி தேர்வு பெற்றால் இந்தியா அதிபர் ஆட்சி முறைக்கு மாறிவிடும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா எச்சரித்துள்ளார்.   

சென்னையில் ஒரு நாடாளுமன்றத் தொகுதி கேட்கும் காங்கிரஸ்

சென்னை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை நகரில் ஒரு தொகுதியைக் கேட்க உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில், மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினத்தையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் தியாகிகளின் உருவப்படத்திற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம்,, ”பாஜகவினர் ராமர் கோவிலைக் கட்டிவிட்டதால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் கோவில் கட்டியவர்கள் யாரும் வெற்றிபெற்றதாக வரலாறு கிடையாது. நீங்கள் கோவில் வேலை முடியாமலேயே கும்பாபிஷேகம் செய்துள்ளீர்கள் என்பதால் 4 சங்கராச்சாரியார்கள் உங்களை … Read more

பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை! இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் ஹேமந்த் சோரன்! ஜார்க்கண்டில் பரபரப்பு

ராஞ்சி: பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது பிடி இறுகப்பட்டு வரும் நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஆஜராகாவிட்டால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக Source Link