தமிழக மீனவர்கள் 10 பேர் நிபந்தனையுடன் விடுதலை.. இலங்கை கோர்ட்டு உத்தரவு
கொழும்பு: தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. அவ்வகையில் கடந்த மாதம் 23-ம் தேதி 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் பருத்திதுறை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 10 மீனவர்களுக்கும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் அவர்களை நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. … Read more