“உங்கள் குழந்தைகளை அல்ல; முதல்வரை அடியுங்கள்” – மே.வங்க பாஜக தலைவரின் பேச்சால் சர்ச்சை: திரிணமூல் கண்டனம்
கொல்கத்தா: மாநிலத்தின் கல்விக் கொள்கை தொடர்பாக மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை அடிக்குமாறு, அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மஜும்தார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திங்கள்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் மஜும்தார் முதல்வரை அடிக்கும் படி மக்களைக் கேட்டுக்கொள்வது பதிவாகியுள்ளது. வீடியோவில் அவர், “பள்ளியில் இருந்து திரும்பும் உங்கள் குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. எந்தக் கேள்விக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பள்ளியில் என்ன … Read more