Invest in Tamil: CM Stalins speech at Investors Conference in Spain | “தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்”: ஸ்பெயினில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மேட்ரிக்: ”பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்” என ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக உங்களுடைய முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு காத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் … Read more

கார்த்தியை பழி தீர்க்க வந்த பாப்பா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவின் பிறந்த நாளை கொண்டாட வீட்டில் ஏற்பாடுகளை செய்கிறான் கார்த்திக், மேலும், தீபாவின் பிறந்த நாளுக்கு பல்லவி வருவதாக சொல்ல, தீபா தானே பல்லவி, நாளைக்கு கார்த்திக் யாரை அழைத்து வரபோகிறார் என்று மீனாட்சி குழப்பம் அடைகிறாள். ஐஸ்வர்யாவுக்கு சிதம்பரத்தின்

புதிய கல்வி சீர்திருத்தத்தில் முன் பிள்ளைப் பருவ வளர்ச்சி குறித்து அதிக கவனம் – கல்வி அமைச்சர்

நாட்டில் நான்கு வயது பூர்த்தியான குழந்தைகளில் 30% வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை அதனால் முன் பிள்ளைப் பருவ வளர்ச்சி குறித்து புதிய கல்வி சீர்திருத்தத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (29) தெரிவித்தார். கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், முன் பிள்ளைப் பருவ வளர்ச்சி மிகவும் முக்கியமானது, உலகில் இது குறித்து அதிக … Read more

பண்டல் நிறைய புடவைகள்… பைக்குடன் அபேஸ் செய்த இளைஞர்! – சிக்கவைத்த சிசிடிவி

சென்னை தி.நகர் தண்டபாணி தெருவில் வசித்து வருபவர் ராகேஷ். இவர் தனது வீட்டின் அருகே மொத்த ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 24.1.2024-ம் தேதி இரவு, புடவைகள் கொண்ட இரண்டு பண்டல்களை கடைக்கு பைக்கில் எடுத்து வந்தார். அதில் ஒரு பண்டலை கடைக்குள் கொண்டு சென்றார் ராகேஷ். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கையும் அதிலிருந்த ஒரு பண்டல் புடவைகளும் மாயமாகியிருந்தன. இது குறித்து ராகேஷ், மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், `நான் … Read more

“தமிழகத்தில் தொழில் தொடங்க திறன்மிக்க மனிதவளம், உயர் சலுகைகள் அளிக்கிறோம்” – ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

மேட்ரிட்: தமிழகத்தில் தொழில் தொடங்குங்கள். அதற்கேற்ற சூழலையும், திறன்மிக்க மனிதவளம், உயர் சலுகைகளை அளிக்கிறோம் என்று ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும், உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரபூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது என்று ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல் ஸ்டாலின் பேசினார். தமிழகத்துக்கு மேலும் பல புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் தற்போது ஸ்பெயின் … Read more

கியான்வாபி மசூதியின் கள ஆய்வறிக்கையை நிராகரித்த முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்

புதுடெல்லி: வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில், கோயிலை இடித்துக் கட்டியதற்கான ஆதாரம் இருப்பதாக இந்திய தொல்லியல் ஆய்வகம் (ஏஎஸ்ஐ) அறிக்கை அளித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை முக்கிய எதிர்மனுதாரரான அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) நிராகரித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோயில் இந்துக்களின் முக்கியமான புனிதத் தலமாக உள்ளது. இக்கோயிலின் அருகே முஸ்லிம்களின் கியான்வாபி மசூதியும் அமைந்துள்ளது. இது, முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் 17 ஆம் … Read more

15 பேருக்கு மரண தண்டனை… பாஜக தலைவர் கொலை வழக்கு – கேரள நீதிமன்றம் தீர்ப்பு

பாஜக ஓபிசி பிரிவுத் தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து ஆழப்புழா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆதியை அவாய்ட் செய்யும் பாரதி-சாரதாவிற்கு சந்தேகம்..இதயம் சீரியல் இன்றைய அப்டேட்!

Idhayam Serial Update Today: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும்  ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

29 நாளில் 30 பேர் உடலுறுப்பு தானம்… உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு சாதனை…

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. ஜனவரி 1 முதல் 29 வரையிலான 29 நாளில் 30 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளனர். 2008 ம் ஆண்டு உடலுறுப்பு தானத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது முதல் தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த மாதம் சராசரியாக ஒருநாளுக்கு ஒரு உறுப்பு தானம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மூளைச் சாவு அடைந்தவர்களின் உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று 2023 செப்டம்பர் மாதம் தமிழக … Read more

‛அஸ்தமனமாகும் அரசியல்’’.. பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை! இனி அவ்வளவுதான்

இஸ்லாமாபாத்: சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி இன்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் Source Link