"அன்பு மகனே சிங்கா! உன்கிட்ட திறமை இருக்கு, தன்னம்பிக்கையை மட்டும் விட்டுறாத" – பாக்யராஜின் கடிதம்

அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்வி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் சாந்தனு, இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாக்யராஜ் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். பிரித்வி, பாக்கியராஜ், சாந்தனு, அஷோக் செல்வன் இது குறித்து பேசிய அவர், “இதை வெற்றிப் படமாக்கிய … Read more

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது… ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்… புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த பல மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த விசாரணையை தொடர்ந்து ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் காவலில் வைத்துள்ளனர். இதனையடுத்து அமலாக்கத்துறை காவலுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஹேமந்த் சோரன் … Read more

சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது- முதல்வர் பதவி ராஜினாமா!

ராஞ்சி: சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவரான சாம்பாய் சோரன் பதவியேற்க உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி Source Link

Train engine pilot arrested for showing handcuffs to passenger | பயணியரிடம் கைவரிசை காட்டிய ரயில் இன்ஜின் பைலட் கைது

ஹாசன் : கடனை அடைப்பதற்காக ரயில் பயணியரிடம் திருடிய, ரயில் இன்ஜின் உதவி லோகோ பைலட் கைது செய்யப்பட்டு உள்ளார். பெங்களூரு – கார்வார் இடையில் இயக்கப்படும் ரயிலில் பயணம் செய்த பயணியரின், சூட்கேஸ்களை திறந்து, ஒரு கும்பல் திருட்டில் ஈடுபட்டது. இதுகுறித்து சக்லேஷ்பூர் ரயில்வே போலீஸ் நிலையத்தில், ஐந்து வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், கடந்த 26ம் தேதி இரவு, பெங்களூரு – கார்வார் ரயில் சென்றதும், சக்லேஷ்பூர் ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, … Read more

தெலுங்கில் 'லவ்குரு' ஆன 'ரோமியா'

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்கும் படம் 'ரோமியோ'. விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். பரூக் ஜே.பாஷா ஒளிப்பதிவு செய்கிறார், பரத் தனசேகர் இசை அமைக்கிறார். விஜய் ஆண்டனி முதன் முறையாக நடிக்கும் முழுநீள காதல் ரொமாண்டிக் படம் இது. இந்த படம் தெலுங்கிலும் வெளியாகிறது. … Read more

Atlee son birthday: பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்டமாக மகன் பிறந்தநாளை கொண்டாடிய அட்லீ.. செம பிக்ஸ்!

சென்னை: இயக்குநர் அட்லீ கடந்த ஆண்டு ஜவான் படத்தின் வெற்றியை மட்டுமின்றி தனது வாழ்வில் மறக்க முடியாத குழந்தை வரத்தையும் பெற்றார். கனா காணும் காலங்கள் சீரியல், சிங்கம் படம் என நடித்து வந்த நடிகை பிரியாவை காதலித்து வந்த அட்லீ கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி

உற்பத்தி நிலை டாடா கர்வ் டிசைன் வெளியானது – Bharat Mobility show 2024

2024 பாரத் மொபைலிட்டி குளோபல் எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் (Tata Curvv) உட்பட 8க்கு மேற்பட்ட வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக டாடா நெக்ஸான் டர்போ பெட்ரோல் சிஎன்ஜி முக்கிய மாடலாக காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் வெளியிடப்பட உள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட கர்வ் ஆனது எலக்ட்ரிக் மற்றும் ICE என இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் பஞ்ச்.இவி அறிமுகத்தின் பொழுது வெளியிடப்பட்ட ஏக்டிவ் பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள கர்வ் மாடல் … Read more

ஐக்கிய இராச்சிய கப்பல் ‘HMS Spey’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொன்டு கொழும்பு வருகை

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஐக்கிய இராச்சிய கடற்படைக் கப்பல் ‘HMS Spey’ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் (SLN) கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்றனர் என்று கடற்படை ஊடகம் தெரிவிக்கிறது. 90.5 மீ நீளமுள்ள கடல் ரோந்துக் (OPV) கப்பலான ‘HMS Spey’, 56 கடற்படைப் பணியாளர்களைக் கொண்டது. இவ்விஜயத்தின் போது கப்பலின் பணியாளர் குழுவினர் பல உள்நாட்டு சுற்றுலா தலங்களுக்கு செல்லவுள்ளனர். HMS Spey … Read more

ராமர் கோயில்: `மன்னிப்பு கேளுங்கள், இல்லை வீட்டை காலி செய்யுங்கள்!' – மணி சங்கர் அய்யருக்கு நோட்டீஸ்

கடந்த 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. 70 ஏக்கர் நிலத்தில், முதற்கட்டமாக 2.67 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டது. இறுதிக் கட்ட கோயில் கட்டுமானம் 2025 டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு ரூ.1,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு, நன்கொடை வசூலிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், “பா.ஜ.க அரசு மத அரசியல் செய்கிறது. அயோத்தி ராமர் கோயில் இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்காத கோயிலை இவ்வளவு அவசரமாகத் திறக்க காரணம் என்ன… பா.ஜ.க-வுக்கு … Read more

“அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது” – இபிஎஸ் திட்டவட்டம் @ சிஏஏ

சென்னை: “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சிஏஏ) சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பாஜகவுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக. கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுகவுக்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் … Read more