இது வேறையா.. விடாமுயற்சி படத்துக்கு வந்த சோதனை.. அஜித் vs மகிழ் திருமேனி லடாய்?
சென்னை: நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. ஆக்ஷன் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அர்ஜுன் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அஜித் மற்றும் அர்ஜுன் இடையிலான கார் சேஸிங் காட்சிகள் உள்ளிட்டவை படமாக்கப்பட்டு வருகின்றன.