Snehan -Kannika: காதலாகி கசிந்துருகி.. புத்தாண்டு கொண்டாட்டத்தில் சினேகன்-கன்னிகா!

சென்னை: பாடலாசியிர் சினேகன் தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டிலிருந்து பாடல்கள் எழுதி வருகிறார். 2500 பாடல்களுக்கும் மேல் இவர் தமிழ் சினிமாவில் எழுதியுள்ளார். பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களில் இவர் பணியாற்றி வருகிறார். பாடகராகவும் நடிகராகவும் இவர் செயல்பட்டுள்ளார். இவர் பாண்டவர் பூமி படத்திற்காக எழுதிய அவரவர் வாழ்க்கையில் பாடல் இவரது எழுத்தில் எவர்கிரீனாக ரசிகர்களால்

ஜார்க்கண்ட்: சாலை தடுப்பு மீது கார் மோதி விபத்து – 6 பேர் பலி

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நகரில் பிஸ்துபூர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சர்க்யூட் ஹவுஸ் அருகே உள்ள சாலையில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 8 பேர் பயணித்தனர். அதிகாலை 5 மணியளவில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை … Read more

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்; ஜேப்பியார் அணி 'சாம்பியன்'..!

சென்னை, இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் பள்ளி அணிகளுக்கு இடையிலான 8-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின், சென்னை மண்டலத்திற்கான இறுதி சுற்றில் ஜேப்பியார் மெட்ரிக் – லாலாஜி மெமோரியல் ஒமேகா பள்ளி அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த லாலாஜி அணி 19.5 ஓவர்களில் 101 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சச்சின், அரிஷ் ரமலான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய ஜேப்பியார் அணி 18.4 ஓவர்களில் 6 … Read more

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 8 பேர் பலி

டமாஸ்கஸ், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல், சிரியாவில் பஷிர் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அவரது ஆட்சிக்கு ஈரான் அரசு ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள், ஆயுதக்குழுக்கள் சிரியா, ஏமன், லெபனான் … Read more

தமிழக அரசு முதலீடு செய்த 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்…

ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர்களால் நடத்தப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க தமிழக அரசு தரப்பில் இருந்து 6.5 கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். ஸ்டாலின் 2023 Vs 2024: நியூ இயர் முதல் கிறிஸ்துமஸ் வரை… ஹாலிடே லூட்டிகள்! சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரால் நடத்தப்படும் ஐந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு … Read more

“இன்னொரு தூத்துக்குடி வேண்டாமே… எண்ணூரை காப்பீர்” – முதல்வருக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கடிதம்

சென்னை: “இன்னொரு தூத்துக்குடி வேண்டாமே. எண்ணூர் பகுதியிலே துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது. நீங்கள் நேரடியாக ஆணையிட்டு கோரமண்டல் ஆலையை மூட வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஸ்டெர்லைட் தாமிர நச்சாலை எங்கள் ஊர் தூத்துக்குடியில் கால் பதித்த ஆண்டு தொடங்கி கடந்த 3 தசாப்தங்களாக பல … Read more

அயோத்தி நில வழக்கில் முஸ்லிம் தரப்பு மனுதாரர் இக்பால் அன்சாரி பிரதமர் மோடி மீது ரோஜா இதழ்களை தூவி வரவேற்பு

அயோத்தி: அயோத்தி நில வழக்கில் முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த மனுதாரர் இக்பால் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி மீது ரோஜா இதழ்களை தூவி வரவேற்றார். அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம் மற்றும் அயோத்தி தாம் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அங்கு சென்றார். அப்போது, விமான நிலையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘அயோத்தி தாம்’ ரயில் நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி காரில் ஊர்வலமாக … Read more

“ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் பல மாதங்களுக்கு போர் நீடிக்கும்” – இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

டெல் அவிவ்: காசாவில் ஹமாஸுக்கு எதிராக நடக்கும் போர் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரான் உந்துதலால் ஹெஸ்புல்லாக்கள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஹமாஸுக்கு எதிரான போர் நடந்துவரும் சூழலில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நெதன்யாகு, "ஹமாஸுக்கு எதிரான போர் அனைத்து முனைகளில் இருந்தும் நடக்கிறது. இந்தப் போரில் வெற்றி காண இன்னும் கொஞ்சம் கால … Read more

ஃபஹத் பாசில் – வடிவேலு இணையும் புதிய படம்! அதிகார்வப்பூர்வ அறிவிப்பு!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கின்றனர்.  

5 ஆம் தேதி சூறாவளிக் காற்று வீசும்… மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம்

5ஆம் தேதி சூறாவளிக் காற்று வீசும் என்பதால் லட்சதீவு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.