செங்கடலில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அதிரடி தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

சனா, காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் … Read more

புத்தாண்டின் முதல் நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியது! சுனாமி வரும் என எச்சரிக்கை!

2024 Tsunami Alert: ஜப்பானில் இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல் சுனாமி அலைகள் ஜப்பானைத் தாக்கியது.

`அடேங்கப்பா..!’ மோடி செல்ஃபி பூத் – செலவும், வலுக்கும் எதிர்ப்பும்!

‘விளம்பரப் பிரியர்’ என்ற விமர்சனத்துக்கு தொடர்ந்து ஆளாகிவருபவர் பிரதமர் மோடி. இதற்கு முன்பிருந்த வேறு எந்த ஒரு பிரதமர் மீதும் ’விளம்பரம்’ தொடர்பான விமர்சனங்கள் இந்தளவுக்கு இருந்ததில்லை. 2014-ல் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்தே விதவிதமாக உடைகள் அணியும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. மோடி இதன் மூலம், நாட்டு மக்களின் கவனத்தை தன் பக்கம் இழுப்பது அவரது விருப்பமாகவும், உத்தியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 2015-ம் ஆண்டு, அன்றைய அமெரிக்க அதிபரான ஒபாமா இந்தியாவுக்கு வருகை தந்தார். … Read more

மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை: முது நிலை மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணி முறையை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்த தமிழழகன் என்ற மருத்துவர், மருத்துவர்களுக்கான பணி அறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் … Read more

ராமர் கோயில் பெயரில் நன்கொடை மோசடி

புதுடெல்லி: விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் நேற்று கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ல்நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ராமர் கோயிலின் பெயரைச் சொல்லி பக்தர்களிடம் நிதி மோசடி நடைபெறுவது தெரியவந்துள்ளது.. மோசடி நபர்கள் கோவிலின் பெயரில் நன்கொடை கோரி சமூக வலைதளங்களில் போலி செய்திகளை வெளியிடுகின்றனர். இந்த செய்திகளில் கியூஆர் கோடும் இடம்பெற்றுள்ளது. அதனை பக்தர்கள் தங்களது மொபைல்போனில் ஸ்கேன் செய்து ராமர் கோயிலுக்கு நன்கொடை செலுத்துமாறு … Read more

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு – மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

டோக்கியா: ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 12.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “ஜப்பானின் ஹொன்ஷுவின் மேற்குக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.5, 7.5, 6.2 ரிக்டர் … Read more

IND vs SA: 2வது டெஸ்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்! முக்கிய வீரருக்கு காயம்?

IND vs SA: கேப்டவுனில் நாளை மறுநாள் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே 2வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படு தோல்வியடைந்தது.  முதல் டெஸ்டின் 3வது நாளில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. 2வது இன்னிங்சில் இந்தியா 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்களில் தோல்வியை சந்தித்தது. தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.  இந்தியா இந்த போட்டியில் … Read more

iPhone 15: இப்படி ஆஃபர் கொடுத்தா ஐபோன் அதிகம் விற்காமல் இருக்குமா?

iPhone 15: ஐபோன் 15 விஜய் விற்பனையில் அதிக ஆஃபர்களுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது. 12 ஆயிரம் ரூபாய் காஷ்பேக் ஆஃபர் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இதுதவிர இன்னும் சில சலுகைகளும் இருக்கின்றன.    

ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை..

ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது   ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.   ஜப்பான் மேற்கு பகுதியில் இன்று காலை  7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,   ஜப்பானின் ஹோன்ஷூ அருகே அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சத்துடன் வெளியேறியுள்ளனர். மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா, … Read more

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! கடற்கரையில் இருக்கும் அணுமின் நிலையத்தின் நிலை என்ன? அரசு விளக்கம்

டோக்கியோ: ஜப்பானில் ரிக்டர் அளவில் 7.4 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் அந்நாட்டின் மேற்கு கடற்கரையை சுனாமி தாக்கியிருக்கிறது. இங்கு அணுமின் நிலையம் இருப்பதால் பேராபத்து நிகழும் அபாயம் எழுந்திருக்கிறது. ஜப்பானின் நானோ , இஷிகாவாவிலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவில் இந்திய நேரப்படி 12.40 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பானை ஒட்டியுள்ள Source Link