ஏற்றம் தரும் 2024 புத்தாண்டு: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான பலன்கள்! கணித்தவர் வேதாகோபாலன் – வீடியோ

    பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் ஆஸ்தான ஜோதிடர்   திருமதி வேதாகோபாலன்  12 ராசிகளுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை வீடியோ வாயிலாக தந்திருக்கிறார். இன்றைய தினம் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய 4 ராசிகளுக்கான பலன்களை தெரிவித்துள்ளார். இந்த புத்தாண்டில்,  பத்திரிகை டாட் காம் வாசகர்களின் எதிர்காலம் எப்படி, அவர்கள் வாழ்க்கையில் மென்மேலும் அனைத்து செல்வங்களையும் பெற மேற்கொள்ள வேண்டியவைகள்  என்னென்ன, தொழில், வியாபாரம், வேலை, பணம் உள்ளிட்ட … Read more

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.4ஆக பதிவு! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

டோக்கியோ: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானின் நானோ , இஷிகாவாவிலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவில் இந்திய நேரப்படி 12.40 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பானை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. Source Link

Be ready to go to jail for paths…: Arvind Kejriwal to AAP workers | சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்: ஆம்ஆத்மியினருக்கு கெஜ்ரிவால் அலர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ”குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிப்பது, ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பது என்று நீங்கள் பேசினால், சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே, அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்” என ஆம்ஆத்மி கட்சியினர் மத்தியில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், நாளை மறுநாள் (ஜன.,3) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனருமான கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. … Read more

புதிய ஆண்டு புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாக ஆக்குவோம் : கமல்

2024ம் ஆண்டு பிறந்து இருக்கிறது. ஒவ்வொருவரும் இந்தாண்டு சிறப்பாக அமைய விரும்புகின்றனர். பல்வேறு தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்து பதிவில், ‛‛புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம். புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து'' என குறிப்பிட்டுள்ளார்.

Ott This week: வீக் எண்ட் மோட் ஆன்.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன!

சென்னை: ஒடிடி தளங்களின் வளர்ச்சியால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும், தியேட்டரில் வெளியான 4 வாரங்களில் அந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகிவிடும் என்பதால், பலர் வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் படத்தை பார்த்து விடுகின்றனர். அப்படி ஓடிடியில் படம் பார்ப்பவர்களை தக்கவைத்துக்கொள்ள ஓடிடி தளங்கள்

RE Himalayan 450 price hiked – ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை உயர்ந்தது

செர்பா 450 என்ஜின் பெற்ற முதல் மாடலான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் விலையை அதிகபட்சமாக ரூ.16,000 வரை உயர்த்தியுள்ளதால் ரூ.2.85 லட்சம் முதல் துவங்கி ரூ.2.98 லட்சம் வரை அதிகரித்துள்ளது. முன்பாக ஹிமாலயன் 450 விற்பனைக்கு வந்த பொழுது விலை ரூ. 2.69 முதல் ரூ.2.84 லட்சம் வரை கிடைத்து வந்தது. Royal Enfield Himalayan 450 Price hiked செர்பா 452cc என்ஜின் பொருத்தப்பட்டு ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC … Read more

திருச்சி: வீடு இடிந்து நான்கு பேர் பலி – புத்தாண்டு தினத்தில் அதிகாலையில் நேர்ந்த துயரம்

திருச்சி அரியமங்கலம் ரயில் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரின் தாயார் சாந்தி (வயது 63). அதேபோல், மாரிமுத்துக்கு விஜயலட்சுமி (36) என்ற மனைவியும், பிரதீபா (9), ஹரிணி (7) என்ற இரு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீடு 1972 – ம் ஆண்டு கட்டப்பட்ட சுண்ணாம்பு கட்டடமாகும். பழைய வீடு என்பதால், மேற்கூரையும், சுவர்களும் வலுவில்லாமல் இருந்துள்ளது. புதுக்கோட்டை: கட்டுப்பாட்டை இழந்து தேநீர் … Read more

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த விபத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் காந்திநகர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து(48). இவரது தாய் சாந்தி 60), மனைவி விஜயலட்சுமி (45), இவர்களது மகள்கள் ஹரிணி (12), பிரதீபா (11). குழந்தைகள் இருவரும் அப்பகுதியில் உள்ள … Read more

மணிப்பூரில் தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்: 4 வீரர்கள் காயம்

இம்பால்: மணிப்பூரின் நகுஜங் மற்றும் சிங்டா குக்கி கிராமங்களில் மைத்தேயி மற்றும் குகி இனத்தவர் இடையே நேற்று முன்தினம் அதிகாலை துப்பாக்கி சண்டையில் மைத்தேயி பிரிவைச்சேர்ந்த ஒருவர் இறந்தார். அன்று மாலை இம்பால் – மோரே நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த போலீஸ் கமாண்டோக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு வீரர் குண்டு காயம் அடைந்தார். Source link