ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக தென் சூடானிலுள்ள சிறிமெட் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இலங்கை இராணுவ வைத்திய படையின் 10 வது குழு புறப்படுவதற்குச் முன்னர் செவ்வாய்க்கிழமை (30) வெரஹெரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையகத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களுக்கு மரியாதை செலுத்தியது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் இராணுவ மருத்துவ படையணி தலைமையக நிலைய தளபதியான பிரிகேடியர் டபிள்யூஎயூஎஸ் வனசேகர ஆர்டபிள்யுபீ யுஎஸ்பீ அவர்களால் வரவேற்கப்பட்டதுடன். படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதனையடுத்து இலங்கை இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் பீஏசி பெர்னாண்டோ யுஎஸ்பீ, அவர்களால் பிரதம அதிதி சம்பிரதாயபூர்வமாக வரவேற்பளித்து அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்துச் செல்லபட்டார். அணிவகுப்புத் தளபதியினால் அணிவகுப்பை மறுபரிசீலனைக்கு அழைக்கப்பட்டதை தொடர்ந்து படையினரால் பிரதம அதிதிக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க மரியாதை செலுத்தப்பட்டது.
மேற்படி குழுவினர் முழுமையான பொறுப்புக்களை ஏற்கவுள்ளதை குறிக்கும் வகையில் தேசிய கொடி, இராணுவ கொடி, ஐக்கிய நாடுகளின் கொடி மற்றும் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் கொடி ஆகியவற்றை சம்பிரதாயங்களுக்கமைவாக இலங்கை இராணுவ வைத்திய படை குழுவிடம் தளபதி கையளித்தார்.
தென் சூடானுக்குச் செல்ல 10வது குழுவில் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் டிஎம்டிஜே திசாநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் 2 ம் கட்டளை அதிகாரி மேஜர் என்.ஐ.ரத்நாயக்க தலைமையில் 14 இராணுவ அதிகாரிகள், ஒரு கடற்படை அதிகாரி மற்றும் 49 சிப்பாய்கள் உள்ளடங்கலாக 64 இராணுவ வீரர்கள் தயாராக உள்ளனர்.
சம்பிரதாய அணிவகுப்பு நிறைவில் பதவி நிலைப் பிரதானி நாட்டிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வெளிநாட்டு பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ஏற்கனவே தென் சூடானில் ஐ.நா பணிக்கு சேவையாற்றும் 9 வது குழுவினர், 10வது குழு பெப்ரவரி 5 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஐ.நாவின் விதிமுறைகளுக்கு இணங்க தமது சேவைக்காலம் நிறைவுடன், விரைவில் நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அணிவகுப்பு மரியாதையினை கண்டுகளித்தனர்.