ஜி.வி.பிரகாஷ் ஹீரோயின் திருமணம் : பாலிவுட் நடிகரை மணக்கிறார்

டில்லியை சேர்ந்த மாடல் அழகி கிர்த்தி கர்பந்தா. 2009ம் ஆண்டு 'போனி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்தார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'புரூஸ்லீ' படத்தில் நடித்தார். சமீபகாலமாக ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருகிறார். தற்போது 'ரிஸ்கி ரோமியோ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஹிந்தி நடிகர் புல்கிட் சாம்ராட் என்பவரை கடந்த நான்கு வருடங்களாகக் கிர்த்தி கர்பந்தா காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.