சாந்திப்பூர் வரவுள்ள தேர்தலில் வெற்றி பெற அனைவரையும் பாஜக சிறையில் தள்ளுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நேற்று நிலக்கரி சுரங்க முறைகேடு, நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருடைய கைது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் மேற்கு வங்க முத்ல்வர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலம் சாந்திப்பூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தை தொடங்கி வைத்தார். பிறகு அவர். ”என்னைக் கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தினால் […]