வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடும் நுகர்வோரை பாதுகாக்கும் வகையில், வருடாந்தம் நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகளை அளவீட்டு அலகுகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் உள்ள நிறுவை அளவு கருவிகளுக்கு இவ்வருடத்திற்கான முத்திரை பதிக்கும் வேலைத்திட்டம் நேற்று(30) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வேலைத் திட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகம் இரண்டில் அமைந்துள்ள அளவீட்டு அலகுகள் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, 12 மாதகாலப் பகுதியில் முத்திரையிடாத வர்த்தகர்கள் தராசுகளுக்கு முத்திரையிட்டுக் கொண்டனர்.
இவ்வாறு முத்திரையிடப்படாது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது 1995ம் ஆண்டின் 35ஆம் இலக்க அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.