ரஜினி படத்திற்கு வசனம் எழுதும் சந்தானம் பட இயக்குனர்?
டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி தற்போது சந்தானம் வைத்து 'வடக்குப்பட்டி ராமசாமி' என்கிற படத்தை இயக்கியுள்ளார் இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி திரைக்கு வருகிறது. இவர் அடுத்து ரஜினி படத்திற்கு வசனம் எழுத போகிறாராம்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்திற்கு வசனம் மற்றும் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராக கார்த்திக் யோகி இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.