உலகின் முன்னணி விமான எஞ்சின்கள் தயாரிக்கும் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் இனைந்து இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் ஓசூரில் விமான எஞ்சின் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கவுள்ளது. ராணுவ விமானங்களுக்கு தேவையான எஞ்சின் பாகங்களை தயாரிக்கும் இந்த நிறுவனத்துக்கு சர்வதேச விண்வெளி உற்பத்தி நிறுவனம் (International Aerospace Manufacturing – IAMPL) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள IAMPL நிறுவனம் அடோர் என்ஜின்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. […]