சென்னை: நடிகர் கார்த்தியின் கார்த்தி 27 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகிவருகிறது கார்த்தி 27. இந்தப் படத்திற்கு மெய்யழகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.