இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!
இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் இன்றைய இடைக்கால பட்ஜெட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.