சென்னை: இந்திய திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநராக இருக்கிறார் வெற்றிமாறன். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் இதுவரை ஆறு படங்கள் இயக்கியிருக்கிறார். ஆறு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. மேலும் இரண்டு படங்களுக்கு தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தற்போது அவரது இயக்கத்தில் விடுதலை 2 உருவாகிவருகிறது. அடுத்ததாக வாடிவாசல் உருவாகவிருக்கிறது. இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில்
