வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐ.நா.,: ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கமான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டிற்கான தன் பங்களிப்பாக 32 மில்லியன் டாலரை இந்தியா செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா.,அமைப்பின் வரவு செலவு திட்டத்தின் கீழ் இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் தங்களது பங்களிப்பு நிதியை ஒவ்வொரு மூன்றாண்டின் நிதியாண்டு துவங்கும் போது செலுத்துவது கடமையாகும்.
இதற்கான அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை குழுவிற்கு தங்களது பங்களிப்பை நிதியாண்டு துவங்கிய 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.இதன்படி இந்த நிதியாண்டிற்காக இந்தியா தன் பங்களிப்பாக 32.895 மில்லியன் டாலரை கடந்த ஜன.31-ம் தேதியே செலுத்திட்டதாக ஐ.நா. பொதுசெயலருக்கான செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்த அறிவிப்பின் போது எந்த நாடு அதிகபட்ச பங்களிப்பை செலுத்தியுள்ளது என்பது குறித்து ஐ.நா..,பின்னர் அறிவிக்க உள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement