உக்ரைன் குண்டுவீச்சு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலி : ரஷியா தகவல்

மாஸ்கோ,

உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியான லிசிசான்ஸ்க் நகர் மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். தற்பொது அங்கு மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரஷியா தெரிவித்துள்ளது.

மாஸ்கோவின் ஆக்கிரமிப்புப் படைகள், வார இறுதி நாட்களில் பிரபலமான ஒரு பேக்கரியை உக்ரைன் குறிவைத்ததாகக் கூறியது. லிசிசான்ஸ்க் நகரில் ரஷிய அவசர அமைச்சகத்தின் ஊழியர்கள், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து 20 பேரின் உடல்களை மீட்டனர் என்று அமைச்சகம் தனது டெலிகிராமில் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் இருந்து தப்பிய 10 பேரை வெளியே எடுத்துள்ளதாகவும், மீட்பு பணிகள் இரவு வரை தொடரும் என்றும் அமைச்சகம் கூறியது.

சுமார் 1,10,000 மக்கள்தொகை கொண்ட லுகான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லிசிசான்ஸ்க் நகரம், 2022ம் ஆண்டு ஒரு கொடூரமான போருக்குப் பிறகு ரஷியப் படைகளிடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.