கோவை வின்சென்ட் ரோடு கோட்டைமேடு பகுதியில் நல்லாயன் உயர்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு 1980 – 199ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்ததும் அனைவரது முகங்களிலும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அதிகம் வெளிப்பட்டது.
அப்போது பள்ளி காலத்தில் நடைபெற்ற நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
இதில் 1990ம் ஆண்டு படித்த கார்த்திக் என்ற மாணவர் தான் ஹைலைட். நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த அவருக்கு வயது 50. கடந்த காலத்தை நினைவு கூறும் வகையில் அப்போதைய பள்ளி சீருடையான காக்கி அரைக்கால் டவுசர் மற்றும் வெள்ளைநிற சட்டை அணிந்து கையில் மஞ்சப்பையுடன் பள்ளிக்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்வை வெகுவாக பாராட்டினார். அப்போது, “முன்னாள் மாணவர்கள் அரசு நிர்வாகத்தோடு இணைந்து பல்வேறு மக்கள் நல பணிகளிலும் ஈடுபட வேண்டும்.” என்றும் சரவணன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கடந்த கால நினைவுகளை மீட்டெடுத்து பேசினார்கள். “முகம்கள் மறந்தாலும், நினைவுகள் மறையவில்லை” என்று அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர்.