பாடப் புத்தகத்தில் `டேட்டிங்' குறித்த சர்ச்சை: சிபிஎஸ்இ விளக்கம்

சென்னை: 9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில்டேட்டிங் குறித்த பாடம் இடம்பெற்றுள்ள விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் புதிய நட்புறவை உருவாக்குதல் மற்றும் உறவுகள் (Dating AndRelationship) என்ற தலைப்பிலான பாடம் இடம் பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன.

இதை எதிர்த்து கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், பதின்பருவ மாணவர்களுக்கு இத்தகைய பாடம் அவசியமில்லை. எனவே, அவற்றை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அதேநேரம், அந்த பாடநூல் தாங்கள் வெளியிடவில்லை என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தின் ‘எக்ஸ்’ வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது, ஆதாரமற்றது. சமூக வலைதளங்களில் பரவும் பாடத்தின் உள்ளடக்கம், ககன்தீப் கவுர் எழுதிய ‘சுய விழிப்புணர்வு மற்றும் அதிகாரம் அளிப்பதற்கானவழிகாட்டி’ என்ற நூலில்இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதை சிபிஎஸ்இ வெளியிடவில்லை. மேலும், எந்த தனியார்பதிப்பக புத்தகங்களையும் சிபிஎஸ்இ பரிந்துரை செய்யவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.