ரோகித் வழக்கம்போல் வந்ததும் கிளீன் போல்டாகி கிளம்பிட்டார் – டிராவிட் ரியாக்ஷன்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மோசமான ஆட்டம் விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியிலும் தொடர்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பெரிதாக விளையாடாத நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 14 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸிலாவது பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி பெவிலியனுக்கு சென்றார். அவரின் மோசமான ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருப்பதால் ரோகித் சர்மா பேட்டிங் மீது விமர்சனம் எழத் தொடங்கியிருக்கிறது. 

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. ஜெய்ஷ்வால் அபாரமாக விளையாடி 209 ரன்கள் குவித்தார். இதனையடுதது இங்கிலாந்து அணி களமிறங்கி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலை பெற்றது.

 February 4, 2024

இந்த ஸ்கோருடன்  இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் பெரிய ஸ்கோர் அடித்தால் அதிக ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக உள்ளது. ஆனால், அதற்கு ஏற்றார்போல் கேப்டன் ரோகித் சர்மாவின் ஆட்டம் இருக்கவில்லை. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிக் கொண்டே இருக்கிறார். அவர் கடைசி நான்கு இன்னிங்ஸ்களிலும் 24, 39, 14, 17 என்ற சொற்ப ரன்களுக்கே ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.

February 4, 2024

ஒரு கேப்டன் என்ற பொறுப்பில் ரோகித் சர்மா பேட்டிங் விளையாடுவதில்லை, அவருடைய இடத்தில் வெளியில் இருக்கும் இளம் வீரர்களுக்காவது வாய்ப்பு கொடுக்கலாம் என ரசிகர்கள் கொந்தளித்து பேசியுள்ளனர். ஒருநாள் மற்றும் 20 ஓவர் என எந்தவொரு தொடரிலும் ரோகித் சர்மா முக்கியமான போட்டிகளில் மட்டும் ஆட்டமிழந்து வெளியேறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.