ஆஸ்திரேலியாவில் பணி நேரத்துக்குப் பின் வரும் வேலைக்கான அழைப்புகளைப் புறக்கணிப்பதற்கான உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரம் முடிந்த பின் பணி தொடர்பாக வரும் “நியாயமற்ற” போன் அழைப்புகளை மறுக்கும் உரிமையை வழங்கும் இந்த சட்ட திருத்தம் அத்தகைய அழைப்புகளுக்கு பதிலளிக்காத ஊழியர்களை தண்டிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க சட்ட திருத்தம் செய்துள்ளது. “ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் ஊதியம் பெறாத ஒருவர் 24 […]