இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு QR குறியீடு மூலம் Unified Payments Interface (UPI) மூலம் பணம் செலுத்தும் முறை சில நிமிடங்களுக்கு முன்னர், ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
NPCI International Payments Limited மற்றும் LankaPay (pvt) ltd உடன் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தை விரைவாக விரிவுபடுத்தும் நோக்கத்துடன் 10,000 விற்பனை நிலையங்களில் இந்த கட்டண முறையை செயல்படுத்துவதுடன், இதனை மேலும் விரிவுபடுத்தி 2024 மார்ச் மாதத்திற்குள் இந்த விற்பனை நிலையங்கள் 65,000 ஆக அதிகரிக்கப்பட உள்ளன.